முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்படும் இடத்தை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்படும் இடத்தை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்
x

வாணியம்பாடியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்படும் இடத்தை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்க திருப்பத்தூருக்கு வருகை தரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பத்தூர் செல்லும் வழியில், வாணியம்பாடியில் வரவேற்பு அளிக்கப்பட உள்ள இடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாணியம்பாடி கூடுதல் பஸ் நிலையம் முன்பாக வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்க இருக்கும் இடத்தை அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் அமர் குஷ்வாஹா, போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ., நகர பொறுப்பாளர் வி.எஸ்.சாரதிகுமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாககள் உடன் இருந்தனர்.


Next Story