ஜப்பான் அதிகாரிகளுக்கு அமைச்சர் காந்தி அழைப்பு
ஜவுளி கண்காட்சியில் கலந்துகொள்ள ஜப்பான் அதிகாரிகளுக்கு அமைச்சர் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, டோக்கியோவில் ஜப்பான் அரசின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக அதிகாரிகளுடன் அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஜப்பான் நாட்டில் உள்ள ஜவுளி நிறுவனங்கள், தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் குறிப்பாக தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியில் ஈடுபடும் ஜவுளி நிறுவனங்களில் முதலீடு செய்ய கோரிக்கை வைத்தார்.
மேலும் நவம்பர் மாதம் சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச தொழில்நுட்ப ஜவுளி கண்காட்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். கைத்தறி மற்றும் கைத்திறன் அரசு முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், ஆணையர் வள்ளலார், அணைக்கட்டு தொகுதி ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
இந்த தகவல் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.