பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் குறைகள் கேட்பு


பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் குறைகள் கேட்பு
x
தினத்தந்தி 9 April 2023 12:15 AM IST (Updated: 9 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் குறைகள் கேட்டறிற்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் குறைகள் கேட்டறிந்தார்.

சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி பகுதியிலுள்ள பொதுமக்களின் குறைகளை கேட்கும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் அதற்கென சிறப்பு குறைதீர்க்கும் முகாம்களை வாரம்தோறும் நடத்தி வருகிறார்.

அந்த வகையில் நேற்று காலை டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

உதவித்தொகை

அப்போது தூத்துக்குடி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு குடிநீர்வசதி, சாலைவசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரியும், வேலைவாய்ப்பு, வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவிகள் கோரி மனு அளித்தனர். பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட அமைச்சர் கீதாஜீவன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

நிறைவேற்றித்தரப்படும்

அதனை தொடர்ந்து மாலையில் 18-வது வார்டுக்கு உட்பட்ட மில்லர்புரம் ஹவுசிங்போர்டு காலனி, ராஜகோபால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து அந்த பகுதியில் உள்ள குறைகளை கேட்டறிந்தார். அப்பகுதி மக்கள் கழிவுநீர் வசதி, சாலை வசதி, வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை ஆகியவை கேட்டு மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் கீதாஜீவன், கோரிக்கைகள் அனைத்தும் துரிதமாக நிறைவேற்றித்தரப்படும் என்று உறுதி அளித்தார்.

இதில் மாநகராட்சி அதிகாரிகள் ஸ்டாலின் பாக்யநாதன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story