வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் ஆய்வு
x

செஞ்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தாா்.

விழுப்புரம்

செஞ்சி

செஞ்சி பேரூராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வுப்பணி நடந்தது. இதற்கு செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு செஞ்சி பேரூராட்சியில் நடைபெறும் தார்சாலை அமைக்கும் பணி, அங்கன்வாடி மையம் மற்றும் சிமெண்டு சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் திருக்கோவிலூரில் இருந்து வரும் செஞ்சி கூட்டு குடிநீர் திட்டம் பராமரிப்பு குறித்தும், அதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார். ஆய்வின்போது பேரூராட்சி உறுப்பினர்கள் ஜான் பாஷா, கார்த்திக், லட்சுமி வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் ரமேஷ், செந்தில் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story