புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு


புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தை  அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உரிய காலத்தில் கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உரிய காலத்தில் கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

நிதி ஒதுக்கீடு

மயிலாடுதுறை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மயிலாடுதுறை மணக்குடியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 13 ஏக்கர் நிலம் நகராட்சியால் வாங்கப்பட்டது. அதில் தமிழக அரசு ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து கடந்த மாதம் 7-ந்தேதி தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரியார் சாமிகள் அடிக்கல் நாட்டி வைத்து பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியது.

அமைச்சர் ஆய்வு

இந்த பணியை அமைச்சர் மெய்யநாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டு பணிகளின் விவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பஸ் நிலைய கட்டுமான பணிகளை நல்ல தரமான முறையில் நவீன வசதிகளுடன் உரிய காலத்தில் கட்டி முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது கலெக்டர் லலிதா, ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், நகராட்சி தலைவர் செல்வராஜ், ஆணையர் செல்வபாலாஜி, பொறியாளர் சணல்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story