தூசி மாடன் கோவிலில் அமைச்சர் மெய்யநாதன் தரிசனம்
கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி தூசி மாடன் கோவிலில் அமைச்சர் மெய்யநாதன் தரிசனம் செய்தார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி வலையர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தூசிமாடன், செந்தாமரை பொற்கொடியான் அம்பிகை என்ற தூசி மாடத்தி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 6-ந்தேதி நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் கும்பாபிஷேகத்தன்று அமைச்சர் அலுவலக பணி காரணமாக பங்கேற்க முடியவில்லை, என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் அமைச்சர் மெய்யநாதன், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தூசிமாடன் கோவிலுக்கு வருகை தந்தனர். அங்கு அவருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் தலைமையில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் சுவாமி தரிசனம் செய்து பக்தர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
விழாவில் சொக்கம்பட்டி வலையர் குடியிருப்பு மூத்தகுடி வளரி வளையல் முத்தரையர் உறவின்முறை தூசிமாடன் அறக்கட்டளை நிர்வாகிகள், கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான், யூனியன் துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.