1½ லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது-அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு
தி.மு.க. ஆட்சியில் இதுவரை மொத்தம் 1½ லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பெரிய கருப்பன் பேசினார்.
சிங்கம்புணரி
தி.மு.க. ஆட்சியில் இதுவரை மொத்தம் 1½ லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பெரிய கருப்பன் பேசினார்.
1½ லட்சம் மின் இணைப்பு
எஸ்.புதூர் ஊராட்சிக்குட்பட்ட பிரான்பட்டி மற்றும் கட்டுக்குடிபட்டி ஆகிய பகுதிகளிலும், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செல்லியம்பட்டி, தேனாம்மாள்பட்டி ஆகிய பகுதிகளிலும் புதிய மின்மாற்றிகளை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பங்கேற்று புதிய மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்து பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் பொதுமக்களுக்கு அத்தியாவசியமாக திகழ்ந்துவரும் மின்சாரத்தை தங்குதடை இன்றி சீராக வழங்கிட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் நலனை காக்கின்ற வகையில் விவசாய பயன்பாட்டிற்காக புதிய மின் இணைப்புகளை வழங்கிடும் பொருட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்று ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் மின் இணைப்புகளை விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சியில் இதுவரை மொத்தம் 1½ லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பெரிய கருப்பன் பேசினார்.
இதில் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2021-22-ம் நிதி ஆண்டில் 2363 விவசாயிகளுக்கு மின் இணைப்புகளும், நடப்பாண்டில் 881 விவசாயிகளுக்கு மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட பிரான்பட்டி, கட்டுக்குடிபட்டி, செல்லியம்பட்டி, தேனம்மாள்பட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 4 பகுதிகளில் ரூ.22 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுடைய அடிப்படை தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக நேரில் என்னிடமோ அல்லது தங்களின் பகுதிக்குட்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலமாக தெரிவிப்பதன் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் மின் பகிர்மான செயற்பொறியாளர் செல்லத்துரை, உதவி செயற்பொறியாளர் ஜான் கென்னடி, சோலை செல்வி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, செல்லியம்பட்டி ஊராட்சி தலைவர் சண்முகம், தேனம்மாள்பட்டி ஜெயலட்சுமி, தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் கணேசன், சிங்கம்புணரி நகர அவை தலைவர் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் அம்பலமுத்து, தி.மு.க. ஒன்றிய செயலாளர் பூமிநாதன், நகர செயலாளர் கதிர்வேல், துணை ஒன்றிய செயலாளர் சிவபுரிசேகர், துணை நகர செயலாளர் அலாவுதீன், பேரூராட்சி துணை தலைவர் இந்தியன் செந்தில், ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், பிரதிநிதி குடோன் மணி, புகழேந்தி, ஞானி செந்தில், கூட்டுறவு சொசைட்டி மேற்பார்வையாளர் வையாபுரி செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.