அனைத்து கோவில் வரலாறுகள் இணைய தளத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்


அனைத்து கோவில் வரலாறுகள் இணைய தளத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
x
தினத்தந்தி 8 July 2022 9:17 PM IST (Updated: 8 July 2022 9:35 PM IST)
t-max-icont-min-icon

பக்தர்களின் வசதிக்காக அனைத்து கோவில் வரலாறுகள் இணைய தளத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை:

பக்தர்களின் வசதிக்காக அனைத்து கோவில் வரலாறுகள் இணைய தளத்தில் வெளியிடப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் தல வரலாறு, தலபுராணம், ஓலைச்சுவடிகள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளிட்டவற்றை முறையாக ஆவணப்படுத்தி, மின்னணு மயமாக்கி, பக்தர்கள் எளிமையாகப் பார்வையிடக் காட்சிப்படுத்தவும், அச்சிட்டு புத்தகங்களாக வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவில் தல வரலாறு, தல புராணம், சிற்றட்டைகள் உள்ள கோவில்களின் விபரத்தினை நகலினை அனுப்பி வைக்கவும், இதன் விவரங்கள் இல்லாத கோவில்களுக்கு தயார் செய்து அதன் விபரம் தெரிவிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஆன்மிக பெரியோர்களால் வெளியிடப்பட்ட அரியவகையான நூல்கள் மற்றும் கோவில் தொடர்பான நூல்கள், உள்பட அனைத்து நூல்களும் மறுபதிப்பு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவில்கள் மூலம் வெளியிடப்பட்ட தல வரலாறு விவரங்கள் ஒருங்கிணைந்த கோவில் மேலாண்மை திட்டத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக கோவிலில் பணிபுரியும் புலவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விரைவில் அனைத்து கோவில் வரலாறுகளையும் மறுபதிப்பு செய்து ஆவணப்படுத்தி துறை இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார் என அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story