அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு சென்றார், அமைச்சர் பொன்முடி


அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு சென்றார், அமைச்சர் பொன்முடி
x
தினத்தந்தி 18 July 2023 3:51 AM IST (Updated: 18 July 2023 4:01 AM IST)
t-max-icont-min-icon

அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நிறைவடைந்த நிலையில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து புறப்பட்டார்.

சென்னை,

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

காலை முதல் மாலை வரை 13 மணி நேர விசாரணைக்கு பிறகு அமைச்சர் பொன்முடியை சென்னை சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து பொன்முடியை அவரது காரிலேயே அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

இரவு 8 மணி முதல் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடைபெற்றது. நேற்று இரவு 8 மணிமுதல் நடைபெற்று வந்த விசாரணை இன்று நள்ளிரவு 3 மணியளவில் நிறைவடைந்தது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நிறைவடைந்த நிலையில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து புறப்பட்டார். தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.


Next Story