ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் 210 தேர்தல் வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றியுள்ளார்
ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் 210 தேர்தல் வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றியுள்ளார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
முதுகுளத்தூர்,
ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் 210 தேர்தல் வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றியுள்ளார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
பொதுக்கூட்டம்
முதுகுளத்தூர் அருகே உள்ள கடம்போடை கிராமத்தில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் பூபதி மணி முன்னிலை வகித்தார். பூசேரி ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி சாந்தகுமார் அனைவரையும் வரவேற்றார். அப்போது அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசும்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வருகிறார். திராவிட மாடல் ஆட்சி என்றால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். ஏழை, பணக்காரர், சாதி, மத வித்தியாசமின்றி அனைவரும் சமம் என்பதை செயல்படுத்துவதுதான் இந்த அரசு.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்-அமைச்சர் செயல்படுத்தி உள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 210 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி சாதனை படைத்து விட்டார். மேலும் பொது மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
பங்கேற்றவர்கள்
இதில், முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜன், கடலாடி ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல், சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன், அமைச்சரின் நேர்முக உதவியாளர் கண்ணன், மண்டப ஒன்றிய சேர்மன் சுப்புலட்சுமி ஜீவானந்தம், மாவட்ட கவுன்சிலர் அருண் பிரசாத் கோவிந்தம்மாள், ஒன்றிய கவுன்சிலர் கொழுந்துறை சரண்யா செல்வராஜ், முன்னாள் இளைஞர் அணி பொதிகுளம் போகர், பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தணிக்கோடி, மாவட்ட பிரதிநிதி கருப்பசாமி, ஊராட்சி தலைவர்கள் வளநாடு பாண்டி, வாகைகுளம் ஜெயலட்சுமி வடமலையான், காணிக்கூர் தென்னரசி செல்ல பாண்டியன், ஏ புனவாசல் ராஜேந்திரன், சிக்கல் பரக்கத் ஆயிஷா சய்வுத்தீன், முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலக உதவியாளர்கள் சக்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன், இளைஞர் அணி வெண்ணீர் வாய்க்கால் முருகன், எஸ்.பி.கே.முருகன் ராஜ்குமார், விவசாய அணி செல்லமணி, வாகைகுளம் அர்ஜூனன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.