அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவுடன் உள்ளார் - ஓமந்தூரார் மருத்துவமனை நிர்வாகம் தகவல்
அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவுடன் உள்ளார் என்று ஓமந்தூரார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை,
17 மணிநேர சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறையால் கைது செய்யப் பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நெஞ்சுவலி காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. செந்தில்பாலாஜியின் ரத்த நாளங்களில் வலது புறத்தில் 90% இடதுபுறம் 80% அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதயதுடிப்பு, ரத்த அழுத்தம் சீராக இருப்பதாக ஓமந்தூரார் மருத்துவமனை டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
செந்தில் பாலாஜி சுயநினைவுடன் உள்ளதாகவும் டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்துகளும், உணவுகளும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்படுகிறது. காவேரி, அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்ற அனுமதி கிடைக்காவிட்டால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என கூறப்படுகிறது.