மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் டுவிட்டர் கணக்கு முடக்கம்
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் டுவிட்டர் கணக்கு மர்மநபர்களால் முடக்கப்பட்டுள்ளது.
சென்னை,
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் டுவிட்டர் கணக்கு மர்மநபர்களால் முடக்கப்பட்டுள்ளது. இவரின் டுவிட்டர் பக்கத்தை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் அவரது கணக்கை ஹேக் செய்து, வேரியோரியஸ் என பெயர் மாற்றம் செய்துள்ளனர். அதில் கிரிப்டோ கரன்சி தொடர்பான பதிவுகளை பதிவிட்டுள்ளனர்.
கொரோனா உடன் போராடும் மக்களுக்கு உதவ நிதி திரட்ட போவதாகவும், அதற்கு கிரிப்டோ கரன்சி மூலம் நிதி அளிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story