திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு


திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு செய்தாா்.

விழுப்புரம்

திண்டிவனம்:

திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று முன்தினம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு பிரிவுக்கும் சென்று ஆவணங்களை சரிபார்த்த அவர், அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார். மேலும் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கையாக எடுத்துள்ள நடவடிக்கைள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

நகராட்சி பொறியாளர் அறையில் ஆய்வு மேற்கொண்டபோது, நகராட்சி இயக்குனர் பொன்னையா காணொலி மூலம் மூலமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றுகொண்டு இருந்தது. உடனே அமைச்சர் செஞ்சி மஸ்தான், காணொலி மூலம் பேசுகையில், திண்டிவனத்துக்கு பொது சுகாதாரத்திற்கு தேவையான வாகனங்களை வழங்க வேண்டும், பூதேரி, ரோசனை, கிடங்கல் -2 உள்ளிட்ட பகுதிகளில் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து அவர், திண்டிவனம் செஞ்சி ரோடு பகுதியில் சுடுகாடு அமைக்கப்பட உள்ள இடத்தையும் அவர் பார்வையிட்டார். ஆய்வின்போது திண்டிவனம் நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் டாக்டர் சேகர், மாவட்ட பொருளாளர் ரமணன், நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன், திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் ஆதித்தன், ஆடிட்டர் பிரகாஷ், கவுதமன், சின்னதுரை, வக்கீல் பாபு, கவுன்சிலர் சீனி ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story