தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய தடகளப்போட்டிகளில், பதக்கங்களை வென்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
20 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய தடகளப்போட்டிகளில், பதக்கங்களை வென்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தென் கொரியாவின் யெச்சியோனில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய தடகளப்போட்டிகளில், பதக்கங்களை வென்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
தென் கொரியாவின் யெச்சியோனில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான 20 ஆவது ஆசிய தடகளப்போட்டிகளில், இந்தியா சார்பில் பங்கேற்று ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கை கனிஸ்தா டீனா, தம்பி சரண் மேகவர்ணம், தங்கைகள் அக்ஷயா & அபிநயா ஆகியோரை இன்று நேரில் வாழ்த்தினோம்.
தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள இவ்வீரர்கள் இன்னும் பல சர்வதேச போட்டிகளில் சாதிக்க அரசு
துணை நிற்கும்.
Related Tags :
Next Story