மாணவியுடன் உணவருந்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


மாணவியுடன் உணவருந்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

மாணவியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணவருந்தினார்.

பெரம்பலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் மேற்கு ஒன்றியம், மேலப்பழூவூரைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி தர்ஷினி. இவர் இளம் பேச்சாளராக தி.மு.க. மேடைகளில் கட்சியின் கொள்கைகளையும், சாதனைகளையும் பேசி வருகிறார். மேலும் இவர், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு சமீபத்தில் நடந்த பேச்சுப் போட்டியில் தமிழ்த் திரையுலகில் கலைஞரின் எழுதுகோல் என்ற தலைப்பில் பேசி 2-வது பரிசை வென்றார். இதில் தான் பெற்ற பரிசுத் தொகை ரூ.7 ஆயிரத்தை, பெரம்பலூருக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், சேலத்தில் நடைபெறவுள்ள தி.மு.க. இளைஞர் அணியின் மாநில மாநாட்டுப் பணிகளுக்காக தர்ஷினி வழங்கினார்.

இளம் வயதிலேயே கருணாநிதி மீதும், தி.மு.க. மீதும் அவர் வைத்திருக்கும் அன்பை கண்டு வியந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவி தர்ஷினிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் மாணவி தர்ஷினியுடன் சேர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணவு அருந்தினார். இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தி.மு.க. துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story