கபடி போட்டிகளின்போது உயிரிழந்த 3 வீரர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்


கபடி போட்டிகளின்போது உயிரிழந்த 3 வீரர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
x

தாம்பரத்தில் மாநில அளவிலான கபடி போட்டியை தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு,

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தாம்பரம் மாநகர தி.மு.க. மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் கபடி போட்டி தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா தலைமையில் மேற்கு தாம்பரம், டி.டி.கே.நகர் பகுதியில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது.

இந்த கபடி போட்டியை தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். முன்னதாக கபடி போட்டிகளின்போது உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாயை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தாம்பரம் மாநகர தி.மு.க. சார்பில் மாநில இளைஞர் அணி அறக்கட்டளைக்கு வளர்ச்சி நிதியாக 5 லட்சம் ரூபாயை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




Next Story