அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நாகை வருகை
தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று(வியாழக்கிழமை) நாகை வருகிறார்.
தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று(வியாழக்கிழமை) நாகை வருகிறார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழகம் முழுவதும் மாவட்டங்கள்தோறும் நடைபெறும் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொற்கிழி வழங்கி வருகிறார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று நடந்த தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இரவு காரைக்காலில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார்.
இன்று நாகை வருகிறார்
நாகை மாவட்டத்தில் உள்ள தி.மு.க. மூத்த முன்னோடிகள் 720 பேருக்கு ெபாற்கிழி வழங்கும் விழா இன்று(வியாழக்கிழமை) நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி வளாகத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி பேசுகிறார்.
தொடர்ந்து 350 பெண்களுக்கு தையல் எந்திரம், 500 ஆட்டோ தொழிலாளர்களுக்கு காப்பீடு மற்றும் சீருடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். விழாவில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.
சிறப்பான வரவேற்பு
நாகை மாவட்டத்திற்கு இன்று வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நாகை மாவட்ட எல்லையான வாஞ்சூர் ரவுண்டானாவில் தி.மு.க. மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
========