சமுத்திரம் ஏரியில் அமைச்சர் ஆய்வு


சமுத்திரம் ஏரியில் அமைச்சர் ஆய்வு
x

திருவண்ணாமலை சமுத்திரம் ஏரியில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை சமுத்திரம் ஏரி நீர்வளத்துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் படகு குழாம், பூங்கா அமைத்து அழகுப்படுத்த மற்றும் மேம்படுத்தும் வகையில் சமுத்திரம் ஏரியின் கரையில் நடைபாதை, பூங்கா, விளையாட்டு திடல், வாகன நிறுத்துமிடம், பொதுமக்கள் தங்குமிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அணுகுசாலை, ஏரி பாதுகாப்பிற்கு இரும்பு வேலி அமைத்தல் ஆகிய வசதிகளுடன் சமுத்திரம் ஏரியின் உபரிநீர் கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரூ.25 கோடியே 54 லட்சம் கருத்துரு தயார் செய்யப்பட்டு சுற்றுச்சூழல் துறை மூலமாக செயல்படுத்த அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சுற்றுசூழல், கால நிலை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவ வி.மெய்யநாதன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், உதவி கலெக்டர் வெற்றிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story