மாற்றுத்திறனாளி மாணவிக்கு அமைச்சர்கள் பாராட்டு
மயிலாடுதுறையில், 2 கைகளும் இல்லாமல் நம்பிக்கையுடன் பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவிக்கு அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
அமைச்சர்கள் பாராட்டு
இதனையறிந்த அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் நேற்று மயிலாடுதுறையில் அந்த மாணவியை சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.தன்னை பாராட்டியதால் நெகிழ்ச்சி அடைந்த லட்சுமி தனது காலால் வரைந்த ஓவியங்களை அமைச்சர்களிடம் காண்பித்தார். அந்த ஓவியங்களை அமைச்சர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். அப்போது மாணவி தனது காலால் வரைந்த ஒரு ஓவியத்தை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிக்கு பரிசாக அளித்தார்.
உதவிகள் செய்யப்படும்
அதனை பெற்றுக்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து தரும் என உறுதியளித்தார்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
2 கைகளும் இல்லாமல் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த லட்சுமியின் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன். பெற்றோர்கள் பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்க்கிறார்கள். பயத்தில் சில மாணவர்கள் தவறான முடிவுகளை எடுப்பது வருத்தமாக இருக்கிறது. இனிவரும் காலங்களில் மதிப்பெண்களை கொண்டு மாணவர்களை மதிப்பிடக் கூடாது. ஒவ்வொருவருக்கும் உள்ள திறமைகளை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் வெளிக்கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு திறமைக்கும் ஒவ்வொரு நாற்காலி காத்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் கவிதா, நிவேதா முருகன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. பிரமுகர்கள் உடன் இருந்தனர்.