புதிய கலெக்டர் அலுவலக திறப்பு விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, ஆர்.காந்தி ஆய்வு
ராணிப்பேட்டையில் நாளை புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, ஆர்.காந்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
ராணிப்பேட்டையில் நாளை புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, ஆர்.காந்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
கலெக்டர் அலுவலகம்
ராணிப்பேட்டை பாரதி நகரில் ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதனை வியாழக்கிழமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மேலும் ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்குகிறார்.
இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் நேற்று ராணிப்பேட்டை புதிய கலெக்டர் அலுவலகத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
பந்தல் அமைக்கும் பணி
மேலும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு பந்தல் அமைக்கும் பணிகளையும் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொறியாளர், ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.