மேடை அமைக்கும் பணியை அமைச்சர்கள் ஆய்வு


மேடை அமைக்கும் பணியை அமைச்சர்கள் ஆய்வு
x

நாமக்கல்லில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கும் பணியை அமைச்சர்கள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

நாமக்கல்

நாமக்கல்லில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கும் பணியை அமைச்சர்கள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு

நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு அடுத்த மாதம் (ஜூலை) 3-ந் தேதி நாமக்கல்லில் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். அன்று காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

இதற்காக நாமக்கல் - சேலம் சாலை பொம்மைக்குட்டைமேட்டில் மேடை மற்றும் அரங்கம் அமைக்கும் பணி இரவு, பகலாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அமைச்சர்கள் ஆய்வு

இப்பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு (நகர்ப்புற உள்ளாட்சித் துறை), மதிவேந்தன் (சுற்றுலாத்துறை) ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அரங்கம் மற்றும் மேடை அமைக்கும் பணிகளை பார்வையிட்ட அவர்கள், எவ்வாறு அமைக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கியதுடன், சிறப்பாக அமைக்கவும் அறிவுறுத்தினர். இந்த நிகழ்ச்சியின் போது நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

இதற்கிடையே நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவும் மேடை அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story