பீஞ்சமந்தை மலை கிராமத்திற்கு புதிய தார்சாலையை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..!


பீஞ்சமந்தை மலை கிராமத்திற்கு புதிய தார்சாலையை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..!
x
தினத்தந்தி 24 July 2023 4:07 PM IST (Updated: 24 July 2023 5:01 PM IST)
t-max-icont-min-icon

பீஞ்சமந்தை மலை கிராமத்திற்கு புதிய தார்சாலையை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம் பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்த்தான் கொல்லை ஆகிய மலை ஊராட்சிகளில் 86-க்கும் மேற்பட்ட மலை குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 35- ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களது 100 ஆண்டுகால முக்கிய கோரிக்கையாக இருப்பது சாலை வசதி மட்டுமே. முத்துக்குமரன் மலையடிவாரத்தில் இருந்து பீஞ்சமந்தை மலை வரை தார்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

குறிப்பாக, இந்த மலைக்கு செல்ல தார் சாலை வசதி இல்லாததால் மக்கள் கடுமையான சிரமங்களை அனுபவித்து வந்தனர். உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்தது. இதையடுத்து முத்துக்குமரன்மலை அடிவாரத்தில் இருந்து பீஞ்சமந்தை வரை 6.55 கிலோ மீட்டர் தூரத் திற்கு தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர், 15.08 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி முழுமையாக நிறைவு பெற்றது.

இந்நிலையில், பீஞ்சமந்தை தார்சாலையை மலைவாழ் மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, மதிவேந்தன், சக்கரபாணி ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் மலைவாழ் மக்கள் 764 பயனாளிகளுக்கு ரூ.19.30 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் பீஞ்சமந்தை மலைக்கு அரசு பஸ் போக்குவரத்து வசதியும் தொடங்கி வைக்கப்பட்டது.


Next Story