வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்கம் தஞ்சை மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பலராமன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்க முன்னாள் மாநில தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் ஹேமலதா, அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் இளங்கோவன், மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தோட்டக்கலைத்துறையில் அமைச்சு பணியாளர் மாறுதல் மற்றும் நியமனத்தில் அரசு விதிமுறைகள் கடைபிடிக்கப்படாததால் மாநிலம் முழுவதும் பணியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனை தோட்டக்கலைத்துறை இயக்குனரிடம் பலமுறை முறையிட்டும் பலனில்லை. எனவே அமைச்சு பணியாளர்கள் மாறுதல் நியமனத்தில் அரசு விதிமுறைகளின்படி சீரான நடைமுறையை பின்பற்றவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் ரெங்கபாஷ்யம் நன்றி கூறினார்.


Next Story