மோட்டார் சைக்கிள் மீது மினிவேன் மோதியதில் மெக்கானிக் பலி


ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது மினிவேன் மோதி விபத்துக்கு உள்ளானதில் மெக்கானிக் பரிதாபமாக பலியானார். தப்பி ஓடிய மினிவேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது மினிவேன் மோதி விபத்துக்கு உள்ளானதில் மெக்கானிக் பரிதாபமாக பலியானார். தப்பி ஓடிய மினிவேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

மெக்கானிக்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்த முத்துக்குட்டி மகன் ராமர் (வயது 30). மெக்கானிக். இவருக்கு 4 அண்ணன்களும், 2 சகோதரிகளும் உள்ளனர். இந்த 6 பேருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். ராமருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் ஆறாம்பண்ணையில் இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் ஆறாம்பண்ணையில் இருந்து மோட்டார் சைக்கிளில் கருங்குளத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக கருங்குளம் ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலத்தில் எதிரே மினிவேனில் ஆடுகளை ஏற்றிகொண்டு சிலர் வந்து ெகாண்டிருந்தனர். மினி வேனை பத்மநாபமங்கலத்தை சேர்ந்த அருணாச்சலம் மகன் வீரமணி (26) என்பவர் ஓட்டிவந்தார்.

வேன் மோதியது

பாலத்தின் மையப்பகுதி அருகில் எதிர்பாராதவிதமாக மஎதிரே வந்த ராமர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மினி வேன் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து ராமர் தூக்கி வீசப்பட்டு, பாலத்தின் சுவற்றில் தலைமோதியதில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேகத்தில் வேனில் வந்தவர்கள் தப்பி சென்று விட்டனர்.

டிரைவர் சிக்கினார்

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலிசார் சம்பவ இடத்திற்கு வந்த ராமரின் உடலை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய மினிவேன் ஓட்டுனர் வீரமணியை ஸ்ரீவைகுண்டம் போலீசார் பிடித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை ைகது செய்தனர். விபத்தில் மெக்கானிக் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story