சிறுபான்மையினர் தொழில் தொடங்க கடன் வழங்கும் முகாம்


சிறுபான்மையினர் தொழில் தொடங்க கடன் வழங்கும் முகாம்
x
தினத்தந்தி 4 July 2023 12:45 AM IST (Updated: 4 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம் வருகிற 10-ந் தேதி முதல் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர்

விருதுநகர்

மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம் வருகிற 10-ந் தேதி முதல் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:-

கடன்வசதி

தமிழ்நாட்டில் வாழும் மத வழி சிறுபான்மையினரான கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பவுத்தர், சமணர், பார்சி மற்றும் சீக்கிய மதத்தைச் சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் புதிதாக தொழில் தொடங்கவும் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தொழிலை விரிவுபடுத்தவும் தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் ஏதுவாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் குறைந்த வட்டியில் தனிநபர் கடன், சிறு வணிக கடன், கல்விக்கடன், கறவை மாட்டு கடன் மற்றும் வாகன கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

சிறப்புமுகாம்

இக்கடன் திட்டங்கள் தொடர்பான விவரங்களையும் சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொள்ளவும் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் வசதியாக 2023-24-ம் நிதி ஆண்டிற்கான கடன் வழங்கும் முகாம் வட்டார அளவில் வருகிற 10-ந் தேதி விருதுநகர் தாலுகா அலுவலகத்திலும், 11-ந் தேதி காரியாபட்டியிலும், 12-ந்தேதி அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்திலும், 13-ந் தேதி திருச்சுழி தாலுகாஅலுவலகத்திலும், 14-ந் தேதி சிவகாசியிலும் நடைபெற உள்ளது.

பயன்பெறலாம்

வருகிற 17-ந் தேதி ராஜபாளையம் தாலுகா அலுவலகத்திலும், 18-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்திலும், 19-ந்தேதி சாத்தூர் தாலுகா அலுவலகத்திலும் 20-ந் தேதி வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்திலும், 21-ந் தேதி வத்திராயிருப்பிலும் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் கடன் தேவைப்படும் சிறுபான்மையினர் கடன் தொகை பெற உரிய ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story