தவளகிரி ஈஸ்வரர் மலையில் மர்ம நபர்கள் தீவைப்பு

தவளகிரி ஈஸ்வரர் மலையில் மர்ம நபர்கள் தீவைப்பு
x

வந்தவாசி அருகே வெண்குன்றம் கிராமத்தில் உள்ள தவளகிரி ஈஸ்வரர் மலையில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்ததால் அரிய வகை மூலிகைச் செடிகள், மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே வெண்குன்றம் கிராமத்தில் உள்ள தவளகிரி ஈஸ்வரர் மலையில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்ததால் அரிய வகை மூலிகைச் செடிகள், மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.

தவளகிரி ஈஸ்வரர் மலை

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1,440 அடி உயரத்தில் தவளகிரி ஈஸ்வரர் மலை உள்ளது. இங்கு பக்தர்கள் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் கிரிவலம் செல்வது வழக்கம்.

மேலும் கார்த்திகை தீபத்தன்று வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமமக்கள் மலை மீது ஏறி தவளகிரி ஈஸ்வரரை தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் மலையில் தீ வைத்துள்ளனர். இதனால் மலையின் ஒரு பகுதி மளமளவென தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

மூலிகை செடிகள், மரங்கள் நாசம்

இதனால் மலையில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள், மரங்கள் தீயில் எரிந்து கருகியது. இதையடுத்து தீயணைப்பு துறை மற்றும் வனத்துறையினர் சென்று தீயை மேலும் பராமல் அணைத்தனர்.

தவளகிரி ஈஸ்வரர் மலை மீது மர்ம நபர்கள் தீ வைப்பது தொடர்கதையாக நீடித்து வருகிறது.

அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் அதிகமாக இருக்கும் இந்த மலையை வனத்துறை அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story