ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்த பயணி படுகாயம்
கழுகுமலையில் ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்த பயணி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள காலங்காரப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த சங்கர ரெட்டியார் மகன் சண்முகராஜ் (வயது 58) இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு கழுகுமலை பிள்ளையார் கோவில் பஸ் ஸ்டாப்பில் இருந்து கழுகுமலையிலிருந்து கோவில்பட்டி சென்ற தனியார் பஸ்சில் ஏறியுள்ளார். பஸ்சில் படியில் நின்றவாறு அவர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. பேருந்தானது கெச்சிலாபுரத்திற்கும் காலங்காரப்பட்டி இடையே உள்ள வளைவில் பஸ் திரும்பியபோது, பஸ்சிலிருந்து சண்முகராஜ் கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கழுகுமலை போலீசார் பஸ்சை ஓட்டிய டிரைவர் தென்காசி மாவட்டம் குருவி குலத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சந்தன குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.