காணாமல் போன விவசாயி முந்திரி காட்டில் பிணமாக மீட்பு


காணாமல் போன விவசாயி முந்திரி காட்டில் பிணமாக மீட்பு
x

விக்கிரமங்கலம் அருகே காணாமல் போன விவசாயி முந்திரி காட்டில் பிணமாக மீட்கப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் செம்மலை (வயது 29), விவசாயி. இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது மனைவி நித்தியாவிடம் வயலுக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பாததால் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் விக்கிரமங்கலம் போலீசில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் விக்கிரமங்கலம் அருகே உள்ள புளியங்குழி தமிழ்நாடு அரசு முந்திரி வனப்பகுதியில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் முந்திரி மரங்களுக்கு மருந்து தெளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு மரக்கிளையில் ஆண் ஒருவர் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடைபெற்ற விசாரணையில் தூக்கில் தொங்கியவர் மாயமான செம்மலை என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செம்மலை தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story