காணாமல் போன முதியவர் கிணற்றிலிருந்து பிணமாக மீட்பு


காணாமல் போன முதியவர் கிணற்றிலிருந்து பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 27 Feb 2023 12:33 AM IST (Updated: 27 Feb 2023 3:02 PM IST)
t-max-icont-min-icon

காணாமல் போன முதியவர் கிணற்றிலிருந்து பிணமாக மீட்க்கப்பட்டது.

புதுக்கோட்டை

கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு மேற்கு பகுதியை சேர்ந்தவர் முதியவர் நாகலிங்கம் (வயது 72). இவரை கடந்த சில நாட்களாக காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று நாகலிங்கம் வீட்டிற்கு சற்று தூரத்தில் உள்ள கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அங்கு சென்று பார்த்த போது சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நாகலிங்கம் பிணமாக மிதப்பது தெரிந்தது. இதுகுறித்து கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து முதியவர் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் கீரமங்கலம் போலீசார் முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story