காணாமல்போன 67 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
செல்போன்கள்
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு செல்போன்கள் திருட்டு, ஆன்லைன் பண மோசடி, சமூக வலைதளங்கள் மூலமாக ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக புகார் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் செல்போன்கள் மாயமானதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி கலந்துகொண்டு உரியவர்களிடம் ரூ.10 லட்சத்து 55 ஆயிரத்து 511 மதிப்பிலான 67 செல்போன்களை வழங்கினார். நடப்பு ஆண்டில் மொத்தம் ரூ.60 லட்சத்து 25 ஆயிரத்து 466 மதிப்பிலான 407 செல்போன் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக ஈரோடு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.