சமூக வலைதளங்களில் பெண்கள் புகைப்படத்தை தவறாக சித்தரித்து வெளியிட்டவர் கைது
சமூக வலைதளங்களில் போலி முகவரி உருவாக்கி பெண்களின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்
சமூக வலைதளங்களில் போலி முகவரி உருவாக்கி பெண்களின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெண்கள் புகைப்படம்
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது புகைப்படத்தை மர்ம நபர் தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியதாக கூறி இருந்தார்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கூடுதல் சூப்பிரண்டு ராஜு மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராஜ் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
வாலிபர் கைது
விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது திருப்பூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் எஸ்.வி. காலனி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (வயது 25) என்பதும், இவர் சமூக வலைதளங்களில் போலி முகவரி தயார் செய்து பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் திருப்பூர் மாவட்டத்துக்கு சென்று சுபாஷ் சந்திரபோஸை கைது செய்தனர்.