இந்தியாவில் உள்ள முதல்-அமைச்சர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் பொன்முடி புகழாரம்


இந்தியாவில் உள்ள முதல்-அமைச்சர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார்  மு.க.ஸ்டாலின் - அமைச்சர் பொன்முடி புகழாரம்
x
தினத்தந்தி 22 Nov 2022 12:20 PM IST (Updated: 22 Nov 2022 12:31 PM IST)
t-max-icont-min-icon

இந்த பட்டத்தோடு நின்றுவிடாமல், இன்னும் பல பட்டங்கள் பெற்று உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றார்.

சென்னை,

சென்னை, இராணி மேரி கல்லூரியின் 104வது பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ராணி மேரி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

இந்தியாவில் உள்ள முதல்-அமைச்சர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். 33 மாணவிகளுடன் துவங்கப்பட்ட கல்லூரியில், இன்று 5000 மாணவிகள் படிக்கிறார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. இது தான் தந்தை பெரியார், அண்னா, கலைஞர், பெருந்தலைவர் காமராஜர் போன்றவர்கள் எல்லாம் உருவாக்கிய மாற்றம். இந்த பட்டத்தோடு நின்றுவிடாமல், இன்னும் பல பட்டங்கள் பெற்று உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றார்.


Related Tags :
Next Story