அரசு ஊழியர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டவர் தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


அரசு ஊழியர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டவர் தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

அரசு ஊழியர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டவர் தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று மாநாட்டில் அமைச்சர் ேக.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.

சிவகங்கை

அரசு ஊழியர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டவர் தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று மாநாட்டில் அமைச்சர் ேக.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.

மாநில மாநாடு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் 10-வது மாநில மாநாடு சிவகங்கையில் 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சங்கர சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

மாநாட்டில் தமிழ்நாடு வளர்ச்சிப்பணி அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலாளர் குமரேசன், ஓய்வூதியர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவி, உள்பட பலர் கலந்து கொண்டனர். மாலையில் நடைபெற்ற கருத்தரங்கில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் துரைப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்ட தலைவர் வேலுச்சாமி நன்றி கூறினார்.

ஊர்வலம்

2-ம் நாள் நடைபெற்ற மாநாட்டைெயாட்டி சிவகங்கை இளையான்குடி ரோட்டில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் சிவகங்கை பழைய நீதிமன்றம் அருகில் உள்ள மன்னர் மேல்நிலைப்பள்ளி வந்தடைந்தது. அங்கு நடைபெற்ற போது மாநாட்டிற்கு மாநிலத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். பொதுச்செயலாளர் பாரி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் கலந்து கொண்டு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது:-

உணர்வுகளை புரிந்தவர்

தமிழக அரசுக்கும் அரசு ஊழியர்களுக்கும் உள்ள உறவு 10 ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது கூட உங்களது ஆதரவு எங்களுக்கு கிடைத்தது. பல காலகட்டங்களில் நீங்கள் நடத்திய போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு கொடுத்துள்ளோம். அரசு ஊழியர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டவர்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.. தற்போது ஆட்சி மாற்றத்திற்கு கூட நீங்கள் ஒரு காரணம் என்பதை மறந்து விட முடியாது.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை முதல்-அமைச்சரிடம் கொடுத்து நல்ல முடிவு காண உதவுகிறேன். சாதி மத வேற்றுமையை கடந்து ஜனநாயகத்தை காக்க இந்தியாவில் ஒரு அரசு உள்ளது என்றால் அது நமது தி.மு.க. அரசு தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநாட்டில் இந்திய தொழிற்சங்க மையத்தின் தலைவர் சவுந்தரராஜன், மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர்கள் மணிமுத்து, சேங்கை மாறன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயலாளர் செல்வகுமார், பொதுச்செயலாளர் பாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விஜயபாஸ்கர் நன்றி கூறினார


Related Tags :
Next Story