பா.ம.க. நிர்வாகிகள் ஆய்வு கூட்டம்-3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு


பா.ம.க. நிர்வாகிகள் ஆய்வு கூட்டம்-3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பா.ம.க. கிளை நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டங்களில் வெளி மாவட்டங்களை சேர்ந்த கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினர். புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, கிளைகளை புதுப்பித்தல், வாக்குச்சாவடி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்தல், கிளை கூட்டம் நடத்துவது, கிராமங்கள் தோறும் கட்சி கொடி ஏற்றுவது போன்ற பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் இண்டூரில் உள்ள ஒரு கோவில் வளாகத்தில் நடைபெற்ற பா.ம.க. நிர்வாகிகள் ஆய்வு கூட்டத்தில் கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, எம்.எல்.ஏ., தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., சேலம் அருள் எம்.எல்.ஏ., தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர் மீ.கா.செல்வகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கம் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினர். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கட்சி நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கிளை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதில் மாநில துணைத் தலைவர் சாந்தமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கமலேசன், ஒன்றிய செயலாளர் சக்தி, ஒன்றிய தலைவர் முருகன், நிர்வாகிகள் கிருஷ்ணன், செல்வராஜ், மாயகண்ணன், பெரியண்ணன், மாது, வஜ்ஜிரமணி, வீரமணி, சந்துரு, காந்திராஜ், சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story