முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.ஆய்வு
திருப்பூர்
உடுமலை தாலுகா குடிமங்கலம் ஒன்றியத்திற்குஉட்பட்ட பண்ணைக்கிணறு ஊராட்சியில் கால்நடை மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டு உள்ளது. இந்த சூழலில் நேற்று திருப்பூர் புறநகர் அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது கல்லூரிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் கல்லூரியை சுற்றிலும் உள்ள பகுதிகளில் தரமான சாலைகள், மின்விளக்குகள் உடனடியாக அமைத்து தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது ஒன்றிய செயலாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story