234 தொகுதியிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் - முதல் அமைச்சர் தொடங்கி வைத்தார்
234 சட்டப்பேரவை தொகுதியிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களில் இ-சேவை மையங்களை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை,
234 சட்டப்பேரவை தொகுதியிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களில் இ-சேவை மையங்களை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இ-சேவை மையங்களுக்கு நவீன மேசை, கணினிகள் வழங்கிடும் அடையாளமாக 10 எம்.எல்.ஏ.க்களுக்கு பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ. 24.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மீன் விதைப்பண்ணைகள், உட்கட்டமைப்பு வசதிகள், பனிக்கட்டி உற்பத்தி நிலையம், மீன்பதப்படுத்தும் மையங்கள் உள்ளிட்ட கட்டடங்களையும்,
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.6.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள களக்கண்காணிப்பு மற்றும் விவசாயிகளுக்கான தகவல் மையம், கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுக் கட்டடங்கள் உள்ளிட்ட கட்டடங்களையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Related Tags :
Next Story