மேற்கூரை பெயர்ந்து விழுந்த பள்ளியில் அசோக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு
மேற்கூரை பெயர்ந்து விழுந்த பள்ளியில் அசோக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
தஞ்சை மாவட்டம் பழைய பேராவூரணியில், போலீஸ் நிலையம் அருகே ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப்பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வரும் கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு காரை திடீரென பெயர்ந்து விழுந்தது. அப்போது அங்கு மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பேராவூரணி அசோக்குமார் எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் அந்த பள்ளிக்கு சென்று கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புதிய வகுப்பறை கட்டப்படும் எனவும், அதுவரை தற்காலிகமாக சிமெண்டு கூரை சீட்டு அமைத்து மாணவர்கள் படிக்க வசதி செய்து தரப்படும் எனவும் உறுதி அளித்தார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வேந்திரன், தவமணி, பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், வார்டு கவுன்சிலர்கள் ஆனந்தன், முகிலன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.