ராமசாமி படையாட்சியார் சிலைக்கு எம்.எல்.ஏ.கள் மாலை அணிவிப்பு
வாணியம்பாடியில் ராமசாமி படையாட்சியார் சிலைக்கு எம்.எல்.ஏ.கள் மாலை அணிவித்தனர்.
மறைந்த முன்னாள் அமைச்சர், வன்னியர் சங்க நிறுவனர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 104-வது பிறந்த நாளை முன்னிட்டு, வாணியம்பாடி பஸ்நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு நேற்று காலை அ.தி.மு.க. சார்பில் வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத் குமார், நகர செயலாளர் சதாசிவம் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் குமார், பாரதிதாசன், கோவிந்தசாமி, காதர் பேட்டை கோவிந்தன், நகர மன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜகீர் அகமது, நியூடவுன் பி.சங்கர், நகர பொருளாளர் தன்ராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் ஆகியோர் வாணியம்பாடி பஸ் நிலையத்தில் உள்ள ராமசாமி படையாட்சியார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதே போல் மாநில வன்னியர் சங்க நிர்வாகிகள் வன்னிய பெருமாள் உள்பட பலர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.