நடமாடும் ஆய்வக அறிவியல் நிகழ்ச்சி
கடையம் பள்ளியில் நடமாடும் ஆய்வக அறிவியல் நிகழ்ச்சி நடந்தது.
தென்காசி
கடையம்:
கடையம் சத்திரம் பாரதி மகளிர் உயர்நிலைப்பள்ளியில் 7- ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு அறிவியல் சார்ந்த ஊக்கத்தை கொடுக்கும் விதமாக அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் சார்பாக நடமாடும் அறிவியல் ஆய்வகம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாணவிகள் பன்னாட்டு நிறுவனத்தின் உதவியுடன் தாங்களாகவே அறிவியல் தொடர்பான பல்வேறு செயல்பாடுகளை செய்தனர். தொடர்ந்து அவற்றை மாணவிகள் பிற மாணவிகள், பொற்றோர், ஆசியர்கள் பார்வைக்காக பள்ளிக்கூட அரங்கில் வைத்தனர். பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர் மாணவிகளை பாராட்டினர்.
Related Tags :
Next Story