குளித்தலை பகுதியில் மிதமான மழை


குளித்தலை பகுதியில் மிதமான மழை
x

குளித்தலை பகுதியில் மிதமான மழை பெய்தது.

கரூர்

குளித்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நேற்று வெயில் குறைவாக இருந்தாலும், வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 7 மணிக்கு மேல் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது. அதுபோல மரக்கிளைகள் ஆங்காங்கே ஒடிந்து விழுந்தன. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது.


Related Tags :
Next Story