சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை..!


சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை..!
x

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

சென்னை,

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் வருகிற 2-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி , ஆலந்தூர் , கோபாலபுரம் , திருவல்லிக்கேணி , மீனம்பாக்கம், கிண்டி , ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.


Next Story