தமிழகத்தின் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கி தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதும், சிறிது நேரம் இடைவெளி விட்டு மீண்டும் பெய்வதுமாக இருக்கிறது.
இந்த நிலையில் சென்னை உள்பட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.