ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம்
ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நாளை தொடங்குகிறது.
மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக ஆண்களுக்கான நிரந்தர தழும்பில்லாத நவீன கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் ரமணசரஸ்வதி கொடியசைத்து தொடங்கி வைத்து, விளக்க கையேட்டினையும் வெளியிட்டார். மேலும் அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான தழும்பில்லாத குடும்ப நல நிரந்தர நவீன கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறை எளியது, தையல், தழும்பு, வலியின்றி ஒரு சில நிமிடங்களில் செய்யப்படும். மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமும் இல்லை. மேலும், ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.