கீரம்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்ரூ.33.73 கோடியில் நவீன தொழில்நுட்ப மையம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.33 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.O தொழில்நுட்ப மையத்தினை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையொட்டி கீரம்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., கலெக்டர் உமா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.
கீரம்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தின் மூலம் தற்போது பயிற்சி பெற்று வரும் 176 மாணவ, மாணவிகளோடு, கூடுதலாக 104 மாணவ, மாணவிகள் பயனடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் உதவி கலெக்டர் சரவணன், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் (பொறுப்பு) செல்வம், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுமதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அருள், தொழிற்பயிற்சி நிலைய இளநிலை பயிற்சி அலுவலர் ரவி உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.