மோடி பிறந்தநாள் கபடி போட்டி


மோடி பிறந்தநாள் கபடி போட்டி
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மோடி பிறந்தநாள் கபடி போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி காந்தி மைதானத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அளவில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் எம்.பி. காளிதாசன் ஏற்பாட்டில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடத்தப் பட்டது.

போட்டியில் 72 அணிகள் கலந்து கொண்டன. பரிசளிப்பு விழாவிற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணை தலைவர்கள் சுரேஷ்குமார், கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர், பாஜக மாவட்ட துணைத் தலைவர் ராஜ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் வேல்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் எம்.பி. காளிதாசன் பரிசுகளை வழங்கினார்.

முதல் பரிசான கோப்பை மற்றும் ரூ.50 ஆயிரம் மாவட்ட தடகள சங்கத் தலைவர் எஸ்.வி. எஸ். பி. மாணிக்கராஜா சார்பில் முப்பிலி பட்டி ஜெய்சங்கர் அணிக்கு வழங்கப்பட்டது.

2-வது பரிசு ரூ.30 ஆயிரம் பூசனூர் தங்கப் பாண்டியன் அணிக்கும், 3-வது பரிசாக ரூ.15 ஆயிரம் கோவில்பட்டி சூப்பர் 7 அணிக்கும், 4-வது பரிசு ரூ.15 ஆயிரம் கீழசெய்தலை தந்தை பெரியார் அணிக்கும் வழங்கப்பட்டது.


Next Story