காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்-கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்


காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்-கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்
x

நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண தொகையை கலெக்டர் ஸ்ரேயாசிங் குறைதீர்க்கும் கூட்டத்தில் வழங்கினார்.

நாமக்கல்

நாமக்கல்:

குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மொத்தம் 224 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். இந்த மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் கடந்த 2019-ம் ஆண்டு காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்த வசந்தகுமார் (வயது 16) மற்றும் கடந்த 2018-ம் ஆண்டு காவிரி ஆற்றில் தண்ணீரில் முழ்கி உயிரிழந்த வெங்கரை கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (31) ஆகியோரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

பரிசுத்தொகை

முன்னதாக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நடந்த பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.34 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மல்லிகா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தேவிகாராணி, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ஜோதி உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story