திருமணம் செய்வதாக கூறி தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் அபேஸ்-சைபர் கிரைம் போலீசார் விசாரணை


திருமணம் செய்வதாக கூறி தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் அபேஸ்-சைபர் கிரைம் போலீசார் விசாரணை
x

திருமணம் செய்வதாக கூறி தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் அபேஸ் செய்யப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல்

நாமக்கல்:

ரூ.5 லட்சம் அபேஸ்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள கதிராநல்லூரை சேர்ந்தவர் பாலசந்தர் (வயது 32). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் மணப்பெண் தேவை என வலைதளம் ஒன்றில் பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த பெண் ஒருவர், நான் லண்டனில் இருக்கிறேன். உங்கள் புகைப்படத்தை பார்த்தேன். உங்களை எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. எனவே உங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என கூறினார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பேசி வந்தனர்.

இந்தநிலையில் திடீரென ஒருநாள் பாலசந்தரை தொடர்பு கொண்ட அந்த பெண், நான் உங்களை பார்க்க தமிழகத்திற்கு 2 லட்சம் பவுண்டுடன் வந்தேன். என்னை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்து கொண்டனர். உங்களது செல்போனுக்கு ஒரு ஓ.டி.பி. எண் வந்திருக்கும் அதை சொல்லுங்கள் என கூறி உள்ளார். இதனை உண்மை என நம்பிய பாலசந்தர் அந்த எண்ணை சொல்லி விட்டார். உடனடியாக அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் அபேஸ் செய்யப்பட்டது.

சைபர் கிரைம் போலீசார் விசாரணை

பின்னர் தான் எதிர்முனையில் தன்னிடம் பேசியது பெண் இல்லை, மோசடி பேர்வழி என்பது பாலசந்தருக்கு தெரியவந்தது. இதையடுத்து ரூ.5 லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வியிடம் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எந்த காரணம் கொண்டும் பொதுமக்கள் தங்களது வங்கி கணக்கு தொடர்பான தகவல்கள், ஓ.டி.பி. நம்பர் போன்றவற்றை யாருக்கும் பகிர வேண்டாம் எனவும், இணைய மோசடி தொடர்பான புகார்களை 1930 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம் என்றும் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.


Next Story