பணம், கணினி திருட்டு
மதுரையில் பணம், கணினியை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்
மதுரை
புதூர்
சத்திரப்பட்டி போலீஸ் சரகம் கல்லம்பட்டியை சேர்ந்தவர் அருண் பிரசாத் (வயது 30). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு திண்டுக்கல்லுக்கு சென்றுவிட்டார். மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் இருந்த கணினி மற்றும் ரூ.11,500 ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிக்கொண்டு தப்பி விட்டனர். வீட்டின் சமயலறை சிமெண்டு பலகைைய உடைத்து உள்ளே புகுந்த நபர்கள் கணினி, பணத்தை திருடியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சத்திரப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story