போலி நகைகளை அடகு வைத்து ரூ.7 லட்சம் மோசடி


போலி நகைகளை அடகு வைத்து ரூ.7 லட்சம் மோசடி
x

கும்பகோணத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

கும்பகோணம், மார்ச்.16-

கும்பகோணத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ரூ.7 லட்சம்

கும்பகோணம் மந்திரி சந்து கல்யாணராமன் தெரு பகுதியை சேர்ந்தவர் கோபால்(வயது51). இவர் கும்பகோணம் டி.எஸ்.ஆர். பெரிய தெரு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது நிதி நிறுவனத்தில் கும்பகோணம் உத்தமதாணி குடியான தெரு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பரசுராமன் கடந்த ஆண்டு 3 சங்கிலிகளை அடகு வைத்து ரூ. 7 லட்சத்து 13 ஆயிரத்து 100 பெற்று சென்றுள்ளார்.இந்த நிலையில் கெடு தேதி முடிந்த பிறகும் பரசுராமன் தான் அடகு வைத்த நகைகளை திரும்ப பெறாததால் சந்தேகம் அடைந்த நிதி நிறுவன ஊழியர்கள் பரசுராமன் அடகு வைத்த சங்கிலிகளை எடுத்து சோதனை செய்தனர்.

வலைவீச்சு

இதில் பரசுராமன் அடகு வைத்த 3 சங்கிலிகளும் போலியானவை என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிதி நிறுவன மேலாளர் கோபால், பரசுராமனை தேடி அவர் கொடுத்திருந்த முகவரிக்கு சென்றார். ஆனால் பரசுராமன் கொடுத்த முகவரியும் போலியானது என தெரியவந்தது. இது குறித்து கோபால் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரசுராமனை வலை வீசி தேடி வருகின்றனர்.தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story