சென்னை வியாபாரியிடம் ரூ.30 லட்சம் மோசடி


சென்னை வியாபாரியிடம் ரூ.30 லட்சம்  மோசடி
x

சென்னை வியாபாரியிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

சென்னை வியாபாரியிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

மொத்த வியாபாரம்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 38). இவருடைய மனைவி ஸ்ரீதேவி (34). இவர்கள் அதே பகுதியில் காய்கறிகள் கடை நடத்தி வந்தனர். இந்த தம்பதி, சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த மொத்த வியாபாரி விக்னேஷ் (30) என்பவரிடம் வெங்காயம், பூண்டு உள்ளிட்ட பொருட்களை வாங்கினர்.

இந்தநிலையில் கடந்த2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நந்தகுமார், ஸ்ரீதேவி ஆகிய இருவரும் விக்னேசிடம் இருந்து பொருட்கள் வாங்கிய வகையில் ரூ.30 லட்சம் பாக்கி வைத்திருந்தனர். இந்த பணத்துக்காக அவர்கள் கொடுத்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாததால் திரும்ப வந்தது.

இதையடுத்து அவர்களிடம் விக்னேஷ் பணம் கேட்ட போது கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். இதற்கிடையில் திடீரென கணவன்-மனைவி 2 பேரும் தலைமறைவாகி விட்டனர்.

கரூரில் கைது

இந்த மோசடி குறித்து விக்னேஷ் கடந்த 2021-ம் ஆண்டு சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி இந்த மோசடி தொடர்பாக நந்தகுமார், ஸ்ரீதேவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை பல்வேறு இடங்களில் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நந்தகுமார், ஸ்ரீதேவி ஆகியோர் கரூரில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமரன், மல்லிகா ஆகியோர் கொண்ட தனிப்படையினர் நேற்று கரூருக்கு விரைந்து சென்று கணவன்-மனைவி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை சேலம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.


Next Story